ஆறு முதல் பத்துவயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வின் கொடுக்க வேண்டும் என்ற குரல் கொடுத்த முதல் தேசியத் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே அவர்கள். அடுத்ததாக ஆங்கிலேயர் ஆட்சியில் 19180 பாம்பே நகராட்சியில் கட்டாயக்கல்விக்கான முதல் சட்டம் நிறைவேற்றப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் அறிமுகம் செய்ததால் இதனை பட்டேல் சட்டம் என்றும் சொல்லப்பட்டது.
பின்பு இச்சட்டம் வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மதராஸ் போன்ற இடங்களிலும் கொண்டு வரப்பட்டது.
பின்பு 1921-47 காலக்கட்டத்தில் வளர்ச்சி பெற்று 1946-47இல் 11,179 கிராமங்களைக் கொண்ட 176 கிராமப்பகுதிகளுக்கு இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
1937இல் வார்தா காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி அவர்கள் ஆதாரக்கல்வியின் மூலம் இலவச கட்டாயக்கல்வியளிக்க, தேசியக் கொள்கை ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்று அறை கூவல் விடுத்தார்.
1947-க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் அனைவருக்குமான தொடக்கக்கல்வியை சட்ட அமைப்பு வல்லுனர்கள் மட்டுமல்லாது தேசியத் தலைவர்களும் வலியுறுத்தினர், இந்தியா சுதந்திரம் அடைந்திருந்த போது 85% மக்கள் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருந்தனர். (6-11) வயதுப்பிரிவில் 31% மாணவர்களே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர் ஐந்தாண்டுத் ஆரம்பக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவே, அநேகப் பள்ளிகள் - திட்டங்களில் உருவாக்கப்பட்டு பெருமளவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இலவசக் கட்டாயக்கல்வியை அனைத்து மாநிலங்களும் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது
தேசிய கல்வி கொள்கை 1986இல் இருபத்தோராம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் தரமான இலவசக் கட்டாயக்கல்வியை கொடுக்க உறுதி செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
உன்னிகிருஷ்ணன் தீர்ப்பு (1993)-ல் இந்த நாட்டி ஒவ்வொரு குழந்தையும் 14 வயது முடிக்கும் வரை இலவசக் கட்டாயக்கல்வியைப் பெற உரிமை உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர்கள் கூட்டு மாநாடு 1998இல் அனைவருக்குமான தொடக்கக்கல்வியைப் பேரியக்கமாக உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்ட அனைவருக்குமான அனைவருக்குமான கல்வி மீதான தேசியகுழு தொடக்கக் கல்வியை 1999-ன் பேரியக்கமாக அறிக்கையில் உருவாக்கி செயல்படுத்தும் போது ஒவ்வொரு மாவட்டத்தையும் அழகாக கொண்டு அதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment