கல்வி அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்ற உதவும் ஒரு கருவியே சுலைத்திட்டமாகும் கல்வி நோக்கங்கள் தேசிய நோக்கங்களின்று பெறப்படுகின்றன. தேசிய நோக்கங்கள் அரசியல் சட்டத்தினால் வரையறுக்கப்படுகின்றன சமத்துவம், சமநீதி மக்களாட்சி தற்சார்பு ஆகியவற்றைக் கல்வி நோக்கங்களாக தேசிய கல்விக் கொள்கை அடையாளம் காட்டியுள்ளது. அது போலவே, மாநிலக் கல்விக் கொள்கைக்கான அடிப்படைகளை முனைவர் மால்கம் ஆதிசேஷையா முதல் தமிழ்நாட்டுத் திட்டக் குழுவின் கல்வி உறுப்பினராக இருந்த பொழுது "கற்கும் சமுதாயத்தை நோக்கி Towards a learning society) என்ற பெயரிட்ட அறிக்கையில் விவரித்துள்ளார். தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ்நாட்டு வளர்ச்சி, தமிழர் கலை இலக்கியம் ஆகியவற்றைப் பேணுதலும் வளர்த்தலுமே தமிழ்நாட்டுக் கல்வி அமைப்பின் குறிக்கோளாகக் கூறப்பட்டுள்ளன. தேசிய, மாநிலக் கல்வி நோக்கங்களைச் செயல்படுத்தும் வகையிலும் பள்ளிக் கல்வியின் பயன்கள் பெற இயலும் வகையிலும் கலைத்திட்டம் அமைய வேண்டும்.
மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (CABE) "பத்தாண்டு கல்வி என்ற வெளியீட்டில் பள்ளிக்கல்வி அமைப்புப் பற்றி விரிவா கூறியுள்ளது. பல மாற்றங்களைக் கண்ட அத்திட்டம் தற்பொழுது தேசிய பள்ளி கல்வி வரைவு 2005" என்று புதுப்பிக்கப்பட்டுள்ளது மாநிலங்களின் கல்வித்திட்டங்கள் அதனைச் சார்ந்து இருத்தல் வேண்டும்.
பாடங்கள், பாடத்திட்டங்கள், வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள், தேர்வும் மதிப்பீடும், பாட நூல்கள் ஆகியவை கலைத்திட்டத்தின் பகுதிகளாகும். சமச்சீர்க் கல்விக்கு வித்திடுவதும் கலைத்திட்டமே வெவ்வேறு முறைகளிலுள்ள கல்வித்திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான கலைத்திட்டம் உருவாக்குவது சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த உதவும் மாணவர்கள் ஐயங்களை எழுப்பவும், அவர்களது சொந்த வார்த்தைகளிலேயே பதில் கூறவும் ஊக்குவிப்பது, அவர்கள் மனப்பாடம் செய்து பாடப்புத்தகத்தில் உள்ள சரியான பதிலைக் கூறுவதைவிட மேலானதாகும்.
இவ்வகையாகக் கற்பித்தால் மாணவர்கள் தமது வெளி உலக வாழ்க்கையோடு தாம் கற்றதைத் தொடர்புபடுத்திக் கற்றதை நன்றாக மனத்தில் பதிய வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தவும் கற்ற வழியில் வாழவும் உதவும் கற்றபின் நிற்க அதற்குத் தக' என்றார் வள்ளுவர் (குறள் 351 பகுதி) உடன் பயிலும் மாணவருடனும், பெரியோருடனும், மற்றவர்களுடனும் கற்றதைக் குறித்துப் பேசுவதும் விவாதிப்பதும் கலந்துரையாடுவதாலும், கல்வித்தரம் உயரும் என்பதில் ஐயமில்லை ஆகவே, இத்தகைய உரையாடல்கள், குழுக்களாகச் செயல்படுவது கலைகள், கைத்தொழில்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது இவையாவும் கலைத்திட்டத்தில் பகுதிகளாக அமைந்து செயற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment