தருக்கமுறை அமைப்பு (Logical structuro)
கணிதத்தின் மற்றொரு சிறப்புப் பண்பு, அதன் வகை பிறழாத தருக்க முறையாகும். குறிப்பிட்ட ஒரு கணிதப் பிரச்சினையைத் தீர்க்க முற்படும்போது, முதலாவதாக அதனை நன்கு.ஆராய்ந்து, கொடுக்கப்பட்டுள்ள கோட்பாடுகளை தருக்க முறையில் வரிசைப் படுத்த வேண்டும். பின்னர், அப்பிரச்சினை வைத் தீர்க்கும் பொழுது, ஒவ்வொரு படியும் காரண விளக்கத் துடன் அமைய வேண்டும். இல்லையேல், நாம் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் சமன்பாட்டுக் குறியில்கூடத் தவறுகள் நேரிடலாம்
உதாரணமாக
1. 200பைகளின் விலை 20 ரூபாய் என்பதை 200 பைகள் : 5. ன்று எழுதுவது தவறு
2 . ஒரு பெட்டி பாதி திறந்திருப்பதும், பாதி மூடியிருப்பதும் சமம் என்பது யாவர்க்கும் தெரியும். ஆனால், இதைச் சமன்பாடாக எழுதினால் 7 திறந்திருப்பது - % மூடியிருப்பது; அல்லது, திறந்திருப்பது = மூடியிருப்பது என்பதும் தவறு. கணிதத் தருக்க முறையில் இவ்விதத் தவறுகளைக் கவனித்து நீக்க வேண்டும்
3 . நான்கு மீட்டர் நீளம், மூன்று மீட்டர் அகலமுள்ள ஓர் அறையின் பரப்பளவைப் பற்றிக் குறிக்கும் போது, 4ex 3e. = 12 ச.மீ. என்று குறிப்பது தவறு இதை (4 x 3)ச.மீ. = 12 ச.மீ. என்றே குறிப்பிட வேண்டும்
தகுந்த ஆதாரங்களின்றி, கூற்றுகள் உண்மைகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. விடை சரியாக இருந்தால் கூட விளக்கம் சரியில்லாத கணக்குகளை ஆசிரியரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. விளக்கங்கள் தருக்க முறையில் அமையாவிடில் மாணவர்களின் மனப்பயிற்சியும் முழுமை பெறாது. மாணவர்கள் இப்பண்பை உணர்ந்து செயற்படும்படி பழக்கப் படுவார்களாகில், கணிதத்தில் மட்டுமன்றித் தங்கள் வாழ்க்கையிலும் காரண மில்லி செயல்களைச் செய்யமாட்டார்கள்.
No comments:
Post a Comment