கணிதத்தின் தன்மைகள் (Nature of Mathematics)
கணிதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை எண்கள் அவற்றைப் பயன்படுத்திக் கணக்கிடும் பலவிதக் கணிப்பு முறைகள், வடிவியல் உருவங்கள், அவற்றை நுட்பமாக அளந்தறியும் முறைகள், வரைபடங்கள், பற்பல குறியீடுகளைக் கொண்டு எழுதப்பட்ட சமன்பாடுகள் இவைதாம். இவற்றை யெல்லாம் கணிதத்தின் கருவிகள் என்று கூறலாம். கணிதம் என்பது இவற்றின் அடிப்படையான சிந்தனைச் சக்தியாகும்; அது ஒரு தருக்கமுறைப் பாடம். நாம் தினமும் பார்க்கும் பொருள் களையும், செய்யும் செயல்களையும் பெரும்பாலும் சார்ந்திருந் தாலும், அதன் முறைகள் யாவும் தருக்க அடிப்படையிலேயே அமைந்தவை. எடுத்துக் கொள்ளப்பட்ட சில குறிப்பிட்ட நிபந்தனைகளிலிருந்து, பகுத்தறிவின் அடிப்படையில் திட்ட மான முடிவுகளை நிரூபித்துக் காட்டுவது கணிதத்தின் தலையாய நோக்கமாகும்
துல்லியம் அல்லது திட்பம் (Precision)
கணிதத்தின் தன்மைகளுள் முதன்மையானது திட்பம். ஒரு பிரச்சினையை விடுவிப்பதால் கிடைக்கும் விடை, சரியாகஇருக்க வேண்டும்; அல்லது, தவறாக இருக்க வேண்டும் இவ் விரண்டு மல்லாத ஓர் இடைநிலையான கருத்துக்குக் கணிதத்தில் உளவியல் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், கணிதத்தின் இத்தகைய பண்பானது மாணவர்களின் மனப்பயிற்சிக்குப் பெரிதும் உதவுகின்றது எனலாம்.
எந்த பிரச்சனையையும் திட்ப நுட்பமாக ஆராய்ந்து சரியான செயல் முறையை பயன்படுத்தி தேவையான விளக்கங்களை காண்பதற்கு கணிதம் மாணவர்களை பழக்குகின்றது.
No comments:
Post a Comment