புள்ளியியல் - Kalvimurasustudymaterials

Latest

Educational materials, Study materials , Books , Note books , Model Questions.......

Nov 24, 2020

புள்ளியியல்




statistics (புள்ளியியல்) என்ற சொல் Status எனும் லத்தின் சொல் (அ) state எனும் இத்தாலிய சொல் (அ) statistic எனும் கிரேக்க சொற்களிலிருந்து வந்தது போல் தெரிகிறது. இந்தச் சொல்லின் அர்த்தம் ஓர் அரசியல் நிலைமை என்பதாம்.


பழங்காலத்தில் ஜனத்தொகை, அவர்களின் பொருளாதார நாட்டைக் காக்கும் பொருட்டு தேவையான இராணுவ சம்பந்தப்பட்ட விவரங்கள் ஆகியவை எண்கள் வடிவத்தில் சேகரிக்கப்பட்டன. இந்த விவரங்கள் எண் தொகைகள் எனப்பட்டன. இதன் அர்த்தம் 'புள்ளி விவரம்'


கணித வளர்ச்சி 16-ஆம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களிடமிருந்து தகவல் சேகரிப்போடு ஆரம்பமானது ஆம் நூற்றாண்டில் சர்வே நிர்வகித்தனர். இது தற்போதுள்ள கணக்கெடுப்பை (சென்ஸஸ்) ஒத்திருக்கும் 18-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் விவசாயம், தொழிற்சாலை, மக்கள் சம்பந்தப் பட்ட தகவல்களைச் சேகரித்தல் நடந்தது


புள்ளியியலின் தந்தையான Sir. Ronald A. Ficher (1890-1962) முயற்சியால் புள்ளியியலுக்குச் சிறந்த இடம் கிடைத்தது. தற்போது இதை அனைத்துத் துறைகளிலும் அறிவியலிலும் பயன்படுத்துகின்றனர்


statistics என்ற சொல்லுக்கு இரு பொருள் உள்ளது ஒருமையில் இதை பயன்படுத்தும் போது அது ஒரு பாடப் பகுதியை மொத்தமாகக் குறிக்கிறது. எண் விவரங்களை சேகரிப்பதில் உள்ள கோட்பாடு மேலும் வழிமுறைகள் எண் விவரங்களைப் பகுப்படுத்துதல் அவற்றிலிருந்து முடிவுகளைப் பெறுவது ஆகியவற்றைக் கொண்ட புள்ளியின் முறைகளைக் கொண்ட ஓர் அறிவியலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது



No comments:

Post a Comment