கடந்த பத்தாண்டுகளாகப் புவி அறிவியலில் வியக்கத் தக்க அளவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்சமயம் புவியை பற்றிய புள்ளிவிவரங்கள் ஏராளமாக கிடைக்கின்றன ஆதலால் புவியின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய நமது கருத்துக்களும் மாறி வருகின்றன. குறிப்பாக புவியின் மேற்பரப்பு ஓரிடத்தில் நிலைத்து நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் புரிந்துக் கொண்டனர். எனவேதான், புவியின் மேற்பரப்பில் கண்டங்கள் நகருகிற திறனைப் பெற்றுள்ளன என்ற புதிய கருத்து பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது நூற்றாண்டுகளில் வெளிவரலாயிற்று
1.கண்டப் போக்குக் கோட்பாடு (Continental Drift)
ஆல்ஃபிரட் வெக்னர் என்ற ஜெர்மானிய வானிலை ஆராய்ச்சியாளர் 1912ஆம் ஆண்டு கண்டப்போக்குக் கோட்பாடு என்ற ஒன்றை முன்மொழிந்தார். அதன்படி, தொன்மை காலத்தில் மாபெரும் கண்டம் ஒன்று இருந்தது என்ற புதிய கருத்தை முன்மொழிந்தார். அவரின் கூற்றுப்படி, இப்பெரும் கண்டத்தை 'பாஞ்சியா' என அழைக்கிறோம். மேலும், சுமார் 200மி. வருடங்களுக்கு முன்னர் பாஞ் சியா சிறிய கண்டங்களாக உடைபட துவங்கியது. அவ்வாறு உடைந்த பின்னர் அச்சிறிய கண்டங்கள் மிதக்கத் துவங்கி, அவ்விடத்தை விட்டு நகர்ந்து தற்போதைய அமைவிடங்களை அடைந்திருக்கலாம் எனக் கூறினார் இக்கோட்பாட்டின் முந்தைய கருத்து கீழ்காணும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது
அ. ஒருசில கண்டங்களில் ஒரே மாதிரியான படிமங்கள் காணப்படுகின்றன. அத்தகைய படிமங்கள் காணப்படுகிற கண்டங்கள் யாவும் கடந்து போன நிலவியல் காலத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருந்திருக்கலாம்.
ஆ. தற்போது சில கண்டங்களில் காணப்படுகிற வெப்ப மண்டலங்கள் முன்காலத்தில் துருவ காலநிலையை கொண்ட மண்டலங்களாக இருந்திருக்கலாம் என்று தொன்மை காலநிலை ஆதாரங்கள் எடுத்துரைக்கின்றன இதிலிருந்து தற்போதைய வெப்ப மண்டலங்கள் முன் காலத்தில் மாறுபட்ட அட்சக்கோடுகளில் அமைந்திருந்து இருக்கலாம்
இ. சுமார் 900 மீட்டர் ஆழத்தில் தென் அமெரிக்காவின் கிழக்குக் கடலோரம் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடலோரம் நெளிவரிபுதிர் (Zig Zag Puzzle) போன்று ஒன்றுடன் ஒன்று பொருந்துகிற அமைப்பைப் பெற்று உள்ளன.
ஈ. தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர பாறைகளில் காணப்படுகிற நிலவியல் படிவுகளை போன்றே ஐரோப்பிய, ஆப்பிரிக்க மேற்கு கடற்கரையோரங்களிலும் காணப்படுகின்றன.
கண்டபோக்கு கோட்பாட்டைப் பற்றிய விவாதங்கள் இருபதாவது நூற்றாண்டின் முதல் முப்பது வருடங்களில் அறிவியலாளர்கள் இடையே மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது, ஆனால் தென் அமெரிக்கா கண்டப்போக்குக் கோட்பாட்டின் செயல்பாட்டினை விளக்க ஆப்பிரிக்க அமைப்பு தேவையான காரணிகள் எதையும் அறிவியலாளர்களால் முன்மொழிய இயலவில்லை. ஆகையினால் அடுத்த முப்பது வருடங்களில் கண்டப்போக்குக் கோட்பாட்டைப் பற்றிய விவாதங்கள் மெதுவாக மறைந்து போயிற்று. வெக்னர் இறந்த ஆண்டான 1930 க்கும், 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டபோோக்குக் கோட்பாட்டை உறுதி சேர்வதற்கான நிகழ்சிகள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் நிகழவில்லை .
1. கடல்தரை விரிவாக்கம்(Sea Floor Spreading):
தொழில் நுட்பங்கள் 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் பெருமளவில் முன்னேற்றம் அடையலாயிற்று. இம் முன்னேற்றத்தின் விளைவாகவே பெருங்கடல் தரைகளை விரிவாகவும், விளக்கமாகவும் மேப்புகளாக வரைய முடிந்தது. அத்தகைய மேப்புகளின் மூலமாக பெருங்கடல்களின் தரைகளிலும் நிலத்தில் அமைந்துள்ளது போலவே மலை தொடர்கள் அமைந்திருப்பது தெரிய வந்தது. இதற்கு மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த புதிய கண்டுபிடிப்புக்குத் தேவையான ஆதாரங்கள் 1960 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒன்றாகத் திரட்டப்பட்டன. அவ்வாறு திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கடல்தரை விரிவாக்கம் என்ற முன்மொழியப்பட்டது புதிய கோட்பாடு ஒன்று கவச அடுக்கிலிருந்து பொங்கி எழுகிற மாக்மா பகுதிகளுக்கு நேர் மேலே காணப்படுகிற புவி மேலோட்டுப் பகுதியில் மலைத்தொடர்கள் அமைகின்றன என்று கடல்தரை விரிவாக்கக் கோட்பாடு கூறுகிறது. இக்கோட்பாட்டின்படி கவச அடுக்கிலிருந்து மேலெழுகிற மாக்மா பெருங்கடல் ஓட்டின் மது பக்கவாட்டில் பரவுகிறது. மேலும் பக்கவாட்டில் பரவுகிற மாக் மாவினால் அவ்விடத்திலுள்ள பெருங்கடல் ஒரு நகர்த்தப்படுகிறது. அவ்வாறு நகர்த்தப்படுகிற பெருங்கடல் ஒடுக்குப் பதிலாக அவ்விடத்தில் புதிய பெருங்கடல் ஓடு உருவாகிறது என எடுத்துரைக்கிறது. ஒரு சில வருடங்கள் கழித்து, கடல்தரை விரிவாக்கக் கோட்பாட்டை உறுதி செய்வதற்குத் தேவையான ஆதாரங்கள் வெளியே வரலாயிற்று. கண்ட போக்கு மற்றும் கடல்தரை விரிவாக்கம் ஆகிய இரண்டு கோட்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, 1968 ஆம் ஆண்டு ஒரு புதிய கோட்பாடு வெளியிடப்பட்டது. இது 'நிலவியல் பலகைக் கோட்பாடு Theory of Plate tectonics) என அழைக்கப்பட்டது
I. நிலவியல் பலகைக் கோட்பாடு
நமது கண்களுக்குப் புலப்படக்கூடிய நிலவியல் நிகழ்சிகள் பலவற்றிற்கான அறிவியல் ஆதாரங்களை நிலவியல் பலகைக் கோட்பாடு ஆணிதரமாக எடுத்துரைக்கிறது. இதன்படி திண்மையான பாறைகோளத்தின் வெளிபகுதி தனித்தனி பாறைத்துண்டுகளாக உடைந்துள்ளது என தெரியவருகிறது. இப்பாறைத் துண்டுகளே நிலவியல் பலகைகள் என அழைக்கப்படுகிறது. இதுவரை ஏறக்குறைய 12 பெரிய பலகைகளும், ஏராளமான சிறிய பலகைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் நிலவியல் பலகைகளின் ஒரு பகுதி கண்டமாகவும், மற்றொரு பகுதி பெருங்கடலாகவும் இருப்பதைக் காணலாம (படம் 2.4). எடுத்துக்காட்டாக வட அமெரிக்கப்பலகையை பார்ப்போமே யானால், அதன் மேற்குப் பாதியில் வட அமெரிக்கக் கண்டமும், அதன் கிழக்குப் பாதியில் அட்லாண்டிக் பெருங்கடல் கொப்பரையும் (basin) இருக்கின்றன. இப்பலகையுடன் ஒப்பிடும் பொழுது பசிபிக் பலகை முழுவதும் பெருங்கடலாக உள்ளது
நிலவியல் பலகைகள் ஒழுங்கற்ற வடிவுடன் வேறுபட்ட பருமனைக் கொண்டுள்ளன. மேலும், நிலவியல் பலகைகள் இடைவிடாது நகர்ந்தபடி உள்ளன. வருடத்திற்கு 15செ.மீ என அதிவேகமாக நகருகிற பலகைகளும்,வருடத்திற்கு 2.5செ.மீக்கும் குறைவாக ஊர்ந்து செல்கிற பலகைகளும் இருக்கின்றன. சில இ களி ல் பலகைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன, சில நேரங்களில் பலகைகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்கின்றன; சில நேரங்களில் கிடையாக நகர்ந்து செல்கிற பலகைகள் மற்றொரு பலகையைக் கடக்கும் பொழுது.அப்பலகையுடன் மோதாமல் நழுவிச் செல்கின்றன. மேலே கூறிய நகர்வுகளின் காரணமாக புவிபரப்பில் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள், எரிமலைகள், நிலநடுக்கம் ஆகியன நிகழ்வுகள் பல நடைபெறுகின்றன. பெரும்பாலும், உலகில் காணப்படுகிற மலைத் தொடர்கள் அனைத்தும் கண்டப்பலகைகளின் மோதல் களினால் உருவானவைகளே என கருதப்படுகிறது எடுத்துக்காட்டாக, இந்தியாவின் வடக்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ள இமய மலைத்தொடர் இரண்டு கண்டப்பலகைகளின் மோதலினால் உருவானதேயாகும்
மலையாக்கம்:
மலை என்பது, அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள நிலப்பகுதியிலிருந்து திடீரென உயருகிற ஒரு நிலமாகும். புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மலைகள் ஒன்றன்பின் ஒன்றாக, நெருக்கமாகவும், தொடர்ச்சியாகவும் காணப்பட்டால், அதை மலைத்தொடர் என அழைக்கிறோம் இத் தகைய மலைத் தொடர்களை எண்ணற்ற அளவில் கொண்டிருக்கிற மலைத்தொடர்களான இராக்கிஸ், ஆண்டிஸ் இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் அப்பலேச்சியன் போன்றவற்றை மலைப்பிரதேசங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். படம் 2.4 இல் காட்டியுள்ளபடி பெரும்பாலான மலைகள் நிலவியல் விசைகளினால் உயர்ந்து, மடிந்து, இடைமுறிந்த (fault) பாறை பொருள்களினால் உருவானவை. இத்தகைய மலைகள் ஒரே ஒரு தொடராகவோ (யூரல் மலைகள்) அல்லது பல தொடர்களால் ஆன ஒரு பகுதியாகவோ (வட அமெரிக்க கார்டிலரா) அமைந்திருக்கின்றன.
கடந்த 150 ஆண்டுகளாக அறிவியல் ஆராய்ச்சிகள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன. ஆராய்ச்சிகளின் மூலமாக. கண்கவர் மலைத்தோற்றங்களை உருவாக்குகிற அகச் செயல்முறைகளை பற்றிய விவரங்கள் அறியப்பட்டன. ஒரு மலைத்தொகுதியை தோற்றுவிக்கிற செயல்முறைகள் அனைத்தும் (Orogenesis) ஒரோஜெனிஸிஸ் என அழைக்கப்படுகிறது. ஒரோஜெனிஸஸ் என்பது, ஒரு (முறை) மற்றும் ஜெனிஸஸ் (வழக்கத்திற்க வருதல்) என்ற கிரேக்க மொழி சொற்களால் உருவாக்கப் பட்டதாகும். உலகிலுள்ள மலைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அவையாவன:
(அ) மடிப்பு மலைகள்
(ஆ) இடை முறிவு மலைகள்.
(அ) மடிப்பு மலைகள் (Fold mountains):
மலையாக்கத்திற்கு (Orogenesis) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலவியல் பலகைகளின் மோதல்களே, முக்கியமான காரணிகளாக அமைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலமாக தெரிய வருகிறது. புவியின் உள்பகுதியிலிருந்து தோற்றுவிக்கப்படும் நிலவியல் விசையினால் கண்ட மேலோட்டுப் பகுதிகள் (மேப்பு: 2)மோதிக் கொள்கின்றன. இத்தகைய மோதல்கள் நடைபெறும்பொழுது அந்த இரண்டு கண்டப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பாறைகளில் மடிப்புகள் தோன்றுகின்றன. மடிப்புகளை கொண்ட பாறைகள் மேலும் நெறுக்கு விசையினால் அழுத்தப் படுகின்றன. அவ்வாறு அழுத்தப்படும் பாறைகளில் இடைமுறிவுகள் ஏற்படுகின்றன. இடைமுறிவுகள் ஏற்பட்ட பாறைகள் மேலே உந்தப்பட்டு மடிப்பு மலைகள் உருவாகின்றன. இவ்வாறு உலகில் நிலவியல் விசைகளினால் உருவாக்கியுள்ள மலைகளில் கண்கவர் தோற்றத்துடன் இமயமலை விண்ணுயர்ந்து காட்சியளிக்கிறது
சுமார் 45 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்திய, ஆசிய கண்டங்களின் மோதல் துவங்கியது. இத்தகைய மோதலுக்கு முன்னர் இந்தியா அண்டார்டிகாவின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அண்டார்டிகாக் கண்டத்திலிருந்து இந்தியா பிரிந்து, ஒருசில ஆயிரம் கிலோ மீட்டர்கள் வடக்கு நோக்கி நகரலாயிற்று. இதன் விளைவாக கண்கவர் இமயமலையும். திபெத்திய உயர் நிலமும் உருவாகலாயின
தற்பொழுதும் இந்திய கண்டம் ஆசிய கண்டத்தைத் தொட அழுத்தி வருகிறது ; திபெத்தும் ஆசியகண்டத்தை வடக்கு நோக்கித் தள்ளுகிறது. எனவே, இப்பகுதி நில அமைவியலை போன்ற, நிலவியல் விசைகளின் செயல்பாடுகளும் சிக்கலானதாகக் கருதப்படுகிறது, சிக்கலான அமைப்பு கொண்டிருக்கிற ஆசியகண்டத்தின் சில பகுதிகள், கிழக்கில் பசிபிக் பெருங்கடலை நோக்கி இன்றளவும் தள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
மேலும் இத்தகைய கண்ட மோதல்கள் நிகழந்ததற்கான சான்றுகளை உலகிலுள்ள பிற மலைத் தொடர்களும் எடுத்துக்காட்டுவதாக உள்ளன. புவிபரப்பிலிருந்து டெத்திஸ் கடல் மறைந்த அதே நேரத்திலேயே ஆப்பிரிக்க, ஜரோப்பிய கண்டப்பலகைகளின் மோதலினால் ஆல்ப்ஸ்ம லை உருவானது எனக் கருதப்படுகிறது
(ஆ) இடைமுறிவு மலைகள் (Fault Mountains):
சில நேரங்களில் கண்ட மேலோட்டுப் பகுதியில் இடைமுறிவுகள் ஏற்படுகின்றன. இடைமுறிவுகள் ஏற்பட புவியினுள் தோன்றுகிற நிலவியல் விசைகளே காரணிகளாக அமைகின்றன. நிலவியல் விசைகளினால் பாறைகள் தங்களின் வலுவை இழக்கின்றன அப்பொழுது பாறைகளில் தோன்றுகிற இடைமுறிவுகளினால் அப்பாறைகள் விரிசலடைகின்றன. இத்தகைய விரிசல்கள் எத்திசைகளில் வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்பொழுது விரிசலடைந்த பாறை துண்டுகள் ஒன்றைவிட்டு ஒன்று விலக்கிச் செல்லுகின்றன. பாறை கோளத்திலுள்ள திடமற்ற பாறைகளில் இழுவிசை கிடையாகச் செயல்படுகிறபோது, அப்பாறைகளில் இடைமுறிவுகள் வரிசையாக நிகழ்கின்றன. அத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடைபெறும் வேளையில் துண்டுப்பாறை ஒன்று கீழ்நோக்கிச் சரிகிறது. அவ்வாறு இடம்பெயர்ந்தப் பாறை துண்டினால் பள்ளம் ஒன்று உருவாகிறது. இப்பள்ளத்தை கிராபன் என அழைக்கிறோம் கிராபனுக்கு இணையாக உடைந்து போன மற்றொரு பாறை துண்டு மேலெழுகிறது இதனால் தோன்றுகிற உயர் நிலத் தை ஹார்ஸ் டு என அழைக்கிறோம்
அண்மையில் இடைமுறிவுகளினால் பாதிக்கப்பட்ட புவியின் மேலோட்டிலுள்ள கிராபன்கள் பிளவு பள்ளத்தாக்குகளாக உருமாறி விட்டன. எடுத்துக்காட்டாக கண்ட ஓட்டில் ஏற்பட்ட பிளவு காரணமாக தோன்றிய கிழக்கு ஆப்பிரிக்கப் பள்ளதாக்கைக் கூறலாம். அதுபோலவே மேலே உயர்ந்த ஹார்ஸ்ட் பாறை கண்டு நீள் மலைத்தொடராக உருவாகிறது. இத்தகைய நீள் மலைத்தொடரை இடை முறிவு மலை என அழைக்கிறோம் எடுத்துக்காட்டாக மேற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள பள்ளங்களும் தொடர்களும் நிறைந்த மாகாணத்தைக் கூறலாம் இம்மாகாணத்தில் பள்ளங்கள் கிராபன்களாகவும், தொடர்கள் ஹார்ஸ்டுகளாகவும் மாறியுள்ளன
III. கீழ்முக வளைவு பள்ளதாக்குகள் (Synclinal Valleys)
கண்டங்களின் மீது அமைந்துள்ள மலைத் தொடர்களைப் பிரிக்கிற பள்ளதாக்குகள் கீழ்முகப் பள்ளதாக்குகள்' எனப்படுகின்றன. இப்பள்ளதாக்குகள் இரண்டு கண்ட மேலோட்டுப் பகுதிகள் மோதுவதினால் உருவாகின்றன. அவ் வாறு மோதுகிற பொழுது அக்கண்டங்களுக்கு இடையேயுள்ள பாறைகளில் மடிப்புகள் தோன்றுகின்றன. சில மடிப்புகள் கீழ்நோக்கியும், சில மடிப்புகள் மேல்நோக்கியும் காணப்படும். கீழ்நோக்கி வளைந்துள்ள மடிப்புகள் கீழ்முக வளைவுகளாகும். இவையே மலைத் தொடர்களின் இடையே காணப்படும் பள்ளதாக்குகளாகும். மேல் நோக்கி வளைந்துள்ள மடிப்புகள் மேல்முக வளைவுகள் ஆகும். மேல்முக வளைவே மலைத்தொடர்களின் உச்சிப்பகுதியாக அமைகிறது
மரண பள்ளத்தாக்கு (Death Valley):
ஒரு சில நேரங்களில் ஒரு பள்ளதாக்கின் உருவாக்கம் அதைச் சுற்றி அமைந்துள்ள மலைகளின் உருவாக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கின்றன. இதற்கு தென் மேற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் அமைந்துள்ள மரண பள்ளதாக்கை எடுத்துக்காட்டாகக் கூறலாம். மரண பள்ளத்தாக்கின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள இரண்டு சிறிய மலைகள் இன்றளவும் உயர்ந்துக் கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில் அம்மலைகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகியும் செல்கின்றன. அதனால் உருவாகிய இடை வெளியில் பாறைகள் கீழ்நோக்கித் தாழ்கின்றன. எனவே, மரண பள்ளத்தாக்குப் பகுதி அமெரிக்க ஐக்கிய நாட்டிலேயே மிகவும் தாழ்வான பகுதியாகக் கருதப்படுகிறது. இந்தப் பள்ளதாக்கு நூற்றாண்டு காலமாகத் தாழ்ந்துக் கொண்டே வருகிறது இயல்புக்கு சற்று மாறுபட்டு உருவான மரணப்பள்ளத்தாக்கு புவிபரப்பில் சிறப்பான தோற்றமாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment