மொழிக்கல்வி - Kalvimurasustudymaterials

Latest

Educational materials, Study materials , Books , Note books , Model Questions.......

Oct 28, 2020

மொழிக்கல்வி

                                                                 நமது மாநிலத்தில் மொழிக் கல்வியும், பயிற்று மொழி பற்றிய விவாதங்களும் உணர்ச்சி அடிப்படையில் நோக்கப்படுகிறது எனினும் ஒரு மாநிலத்தில் வாழும் மக்களின் கல்வியில், அம்மாநில மொழியைக் கற்பது, சேர்க்கப்படாமல் இருப்பது சரியல்ல என்ற கருத்து இப்போது பல மாநிலங்களிலும் பரவலாக உள்ளது. ஆகவே பல மாநிலங்களில், மாநில மொழி கற்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது நியாயம் என்று அம்மாநில உயர்நீதி மன்றங்களும் தீர்ப்புக் கூறியுள்ளன. அந்த வகையில், நமது மாநில அரசும் அண்மையில் ஒரு சட்டம் இயற்றி உள்ளது. (Tamilnadu Act 13 of 2006) நமது மாநிலத்தில் உள்ள கல்வித் திட்டங்களில் இரு மொழிகள் மட்டுமே கற்பித்தாலும், ஓரியண்டல் பள்ளிகளில் மூன்றாவதாக பண்பாட்டு மொழியாக ஒரு சிறப்பு மொழிப்பாடமும் உள்ளது அவர்கள், சமூக அறிவியல் படித்தாலும் அதில் தேற வேண்டியது அவசியம் இல்லை என்று இப்போது விதி உள்ளது. ஆனால் அவர்களும் சமூக அறிவியலில் தேர்ச்சி பெறுவது நல்ல குடிமக்களை உருவாக்கப் பயன்படும் என்று அவ்வகைப் பள்ளியினரிடையே ஒரு பரவலான கருத்து நிலவுகிறது. மேலும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் ஆங்கில மொழிக்கு ஒரு சிறப்பு இடம் கொடுக்கப் படுகிறது. இச்சூழலில் அனைத்துக் கல்வித் திட்டங்களையும் இணைத்து. பின்வருமாறு மொழிப்பாடங்களை அனைத்து மாணவர்க்கும் கற்பிக்கலாம் என்று இந்தக் குழு பரிந்துரைக்கிறது.

                                      தமிழ் ஆங்கிலம் - ஓரியண்டல் மொழி / சிறப்புத் தமிழ் / சிறப்பு ஆங்கிலம் அல்லது தாய்மொழி தாய்மொழி தமிழோ. ஆங்கிலமோ இல்லாதவர் தமது தாய்மொழியைப் படிப்பது அவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது. அவர்களில் சிலர் ஓரியண்டல் மொழியைக் கற்க விரும்பினால் தங்கள் தாய்மொழியைக் கூடுதலாகக் கற்க நேரிடும். இத்தகைய மாணவர்கள் மிகச் சிலரே இருக்கக்கூடும் இந்த வகையான மொழிப்பாடத் திட்டத்தில் ஓரியண்டல் மொழி கற்க விரும்பும் மாணவர் தாம் விரும்பும் ஓரியண்டல் மொழியைக் கற்கலாம்; தமிழிலோ அல்லது) ஆங்கிலத்திலோ சிறப்பு புலமைப் பெற விரும்பும் மாணவர் தாம் விரும்பும் தமிழையோ ஆங்கிலத்தையோ சிறப்பாகக் கற்கலாம். தன்னுடைய தாய்மொழியைக் கற்க விரும்பும் மாணவர்கள் தமது தாய் மொழியைக் கற்கலாம் என்பதால், இத்திட்டம் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என இக்குழு நம்புகிறது. 

                                             மேலும் மொழிகளைக் கற்பதில் மாணவர்களிடையே மாறுபாடு இருக்கும் என்பதால், மொழிகளைக் கற்பிப்பதில் ஒரு நெகிழ்ச்சி இருப்பது நலம் அதாவது தாய்மொழி தமிழ் அல்லாதவர், அவர் விருப்பத்திற்கேற்ப தம் தாய்மொழியை முதலில் கற்று அதற்குப் பிறகு, அம்மொழி வழியாக மற்ற மொழிகளைக் கற்கச் செய்யலாம் எனவேதான், மொழிகளைக் கற்பிப்பதில் ஒரு நெகிழ்ச்சியைக் கடைப்பிடிக்கலாம் என இக்குழு பரிந்துரைக்கிறது. எனினும், 5ஆவது வகுப்பு அல்லது 8ஆவது வகுப்பு முடிக்கும் பொழுது, அனைத்து மாணவர்களும், தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்பிட்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்து, இம்முடிவிற்கேற்ப பாடத்திட்டங்களை வகுக்கலாம்.


பாடத்திட்டக் குழுமங்கள்

1. தமிழ்

2. ஆங்கிலம் 

3. ஓரியண்டல் மொழிகள் 

4 மற்ற மொழிகள் 

5. கணிதம் 

6. அறிவியல் 

7. சமூக அறிவியல் 

8 கல்வி சார்ந்த மற்றவை - கலைகள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை

9 .தனிக்கவனம் தேவைப்படுபவை ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் கல்வி 

10. தனித் தேவைகள் 

11. மேலும் வாரியம் தேவை என்று சுருதும் துறைகள் / இனங்கள் தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வி வாரியம் என்று ஒரு தன்னாட பெற்ற வாரியம் அதன் கீழ் தேவைப்படும் கல்விக் குழுமங்களும் அமைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் செயற்பட அரசு நடவடிக்கை எடுத்தால்தான் சமச்சீர்க் கல்வி முறை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும்.

No comments:

Post a Comment