மானிடப் பிறவியில் பள்ளியில் கல்வி கற்கும் காலம்தான் உடல் அளவிலும், மன அளவிலும் வேகமாக வளரும் காலம் மாணவர் உடல் உள்ள வளர்ச்சிக்கேற்பவும் அவர்தம் தேவைக்கேற்பவும் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
" உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பார் திருமூலர். (திருமந்திரம் பாடல் 708, வரி 4)
உயிர் சார்ந்த வளர்ச்சி யாவற்றிற்கும் உடல் வளர்ச்சியே ஆதாரம். உடல் வளர்ச்சிக்கு குழந்தைகள் உடற்பயிற்சி, விளையாட்டுகள், யோகாசனம், கலைகள் நடனங்கள் இவற்றில் பங்கேற்க வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் எல்லோரும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லை ஏனெனில் அது சில மாணவருக்கு மன அழுத்தத்தை உருவாக்கவும் கூடும் உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபாடு உடைய மாணவர் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பினால் அவர்களுக்குத் தேவையான வாய்ப்பு வசதிகளை உருவாக்கித் தருவது பள்ளியின் கடமை
சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் இருந்து வந்தாலும் அனைவரும் கற்கத் தகுந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கிடையே உள்ள மாறுபாடுகளை ஒரு சிக்கலாக நோக்காது பலதரப்பட்ட மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்பாகக் கருதி எல்லாக் குழந்தைகளும் தரமான கல்வி பெறத்தக்க வகையில் கலைத்திட்டத்தை உருவாக்குவது பள்ளிக்கல்வி நிர்வாகத்தின் பொறுப்பாகும். மத, மொழி, இன, பால் வேறுபாடின்றித் தங்கள் பகுதியில் வசிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மாநில பள்ளிக்கல்வி வாரியம் வகுத்த கலைத் திட்டத்தை செயல்படுத்துவது அனைத்துப் பள்ளிகளின் கடமை ஆகும். பள்ளிக்கு அனுமதி அளிக்கும் ஆணையில் இக்கடமை குறிப்பிடப்பட வேண்டும்.
No comments:
Post a Comment