குழந்தைகளுக்கு இயற்கையாகவே கற்கும் திறன் உண்டு பொதுவாக குழந்தைகள் எதைக் கண்டாலும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுடன் செயல்படும் புதியனவற்றைக் காண முயலும் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டு வினாக்களை எழுப்பி அவற்றுக்கான தீர்வுகளைக் காண முயலும் குழந்தைகள் துடிப்புடன் பலவற்றையும் புரிந்து கொள்ள முயலுவதோடு தம் சமுதாய அறிவையும் பண்பாட்டையும் புரிந்து கொள்ளும் திறனை இயற்கையாகவே பெற்றுள்ளனர். மேலும் தம் செயற்பாடுகள் மூலம் தமது அறிவைப் பெருக்கிக் கொள்கின்றனர். ஆகவேதான் கற்போரை முதன்மைப் படுத்திய கல்வி போற்றப்படுகிறது.
இத்தகைய கல்வியில் குழந்தைகளின் அனுபவம் முக்கியமானது என்று கருதப்படுகிறது. அதாவது மாணவரின் உலகைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற இயல்பான ஆர்வத்தை வளர்த்து அவ்வழியிலேயே அவர்கள் அறிவைப் பெருக்க வேண்டும். கற்றல் என்பது வகுப்பறையில் அமரந்து ஆசிரியர் சொல்வதைக் கேட்பது மட்டும் அல்ல. கற்றல் என்பது கல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது. கல் என்றால் தோண்டுதல் என்று பொருள். கற்றல் என்பது மறைந்து இருப்பதை வெளியில் கொண்டு வருதல். ஆகவே அது தானே முயன்று ஆசிரியர் மாணவர் போன்ற மற்றவருடன் இணைந்து உலகைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். பொதுவாக நல்ல மாணவன் என்பவன் நன்னடத்தை உள்ளவனாகவும் ஆசிரியர்கள் தன்னைவிட மேலான கல்வி அறிவு பெற்றவர்கள் என்பதால் அவர்கள் அறிவைப் போற்றுபவனாகவும். பொதுவாக ஆசிரியர் சொற்படி நடப்பவன் என்றாலும்
"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"
என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க எதையும் ஆராய்ந்து ஏற்றுக் கொலயவனாகவும் பல நூறுக்கங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவல் உள்ளவனாகவும் இருப்பான்.
No comments:
Post a Comment