மொழிப்பாடம் - Kalvimurasustudymaterials

Latest

Educational materials, Study materials , Books , Note books , Model Questions.......

Oct 28, 2020

மொழிப்பாடம்

                                                        பள்ளியில் சேரும்போதே குழந்தைகள் வீட்டு மொழி தாய்மொழி ஆகியவற்றின் பல சொற்களை அறிந்திருப்பார்கள் உச்சரிப்பு, வாக்கியத்தில் அமைத்துப் பேசுதல் ஆகிய பல இிறமைகளுடனும் வருகிறார்கள். மேலும் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு சரியான முறையில் பேசவும் அவர்களுக்குத் தெரியும். இவ்வாறான திறமைகளை சரியான வடிவம் கொடுத்து வளர்ப்புதும் எழுத்துகளைக் கற்பித்துப் படிக்கவும் எழுதக் கற்றுத் தருவதும் தொடக்கக் கல்வி ஆசிரியரின் தலையாய பணியாகும். மேலும், பள்ளியில் சேரும்போது கொச்சையாகப் பேசும் குழந்தைகளைப் படிப்படியாக தவறின்றித் தாய்மொழியில் பேசக் கற்றுத்தருவதும் ஐந்தாவது ஆண்டு படிப்பை முடிக்கும்போது, தாய்மொழியில் நல்ல முறையில் பேசு படிக்க எழுத கற்றுத் தருவதும் ஆசிரியரின் கடமை அதாவது ஓரளவு தாய்மொழி அறிவோடு பள்ளிக்கு வந்தாலும் முறையாக மொழியைக் கற்றுக் கொள்வது பள்ளியில்தான். தாய்மொழியைக் கற்பிப்பதைப் பற்றி தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு (2005) பின்வருமாறு சொல்கிறது. இலக்கியம் என்பது குழந்தையின் சொந்தக் கற்பனைகளைத் தூண்டுவதாக இருக்க வேண்டும் ஒரு கதையை, ஒரு பாடலை ஒரு கவிதையைக் கேட்ட பிறகு குழந்தையைத் தானாகவே அதுபோன்ற கதை பாடல் கவிதை வழங்க ஊக்குவிக்க வேண்டும்

இரண்டாவது மொழியைக் கற்றல்

                                       பல மொழிகள் பேசப்படும் நமது நாட்டில், ஆங்கிலம், ஓர் உலக மொழி என்ற அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது. "நமது நாட்டில் ஆங்கில மொழி அறிவைப் பெறுவது என்பது கல்வி ரீதியில் இல்லாது மக்களின் உணர்வுகளுக்கு அரசியல் ரீதியான பதிலாக அமைந்துள்ளது என்று தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு (2005) சுட்டிக்காட்டுகிறது. மேலும் அதே அறிக்கை "மொழிகளில் உயர் திறமை என்பது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. எடுத்துக்காட்டாக, படிக்கும் திறமையைக் கூறலாம் ஒரு மொழியில் படிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டால், அதே திறமையை இன்னொரு மொழியிலும் பெறலாம். சொந்த மொழியில் படிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள முடியாதவனால், இரண்டாவது மொழியில் படிக்கும் திறனை அடைய முடியாது என்று சொல்வதும் நோக்கத்தக்கது.

                            ஆங்கிலம் கற்று, ஆங்கில வழி கற்றால்தான் வெளிநாடுகளில் வேலைகள் கிடைக்கும் என்று பொதுமக்கள் பலர் கருதுகிறார்கள் ஆனால் - ஆங்கிலம், எல்லோருக்கும் கற்பிப்பது, இரு மொழி வல்லுனர்கள் பலரை உருவாக்குவதும் அதன்வழி நமது நாட்டு மொழிகளை வளப்படுத்தலாம் என்பது மே பொதுவாக கல்வியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்தாகும்

                         தாய்மொழி, தமிழ்மொழியாக இல்லாத குழந்தைகள், அவர்கள் சூழலுக்கு ஏற்றார் போல சிலர் தமிழையும் தாய்மொழியோடு இணையாகக் கற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும், ஒரு சிலர் ஓரளவுக்குத் தாய்மொழி அறிவு பெற்ற பின்னரே, தமிழைக் கற்கள் கூடியவர்களாக இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்குத் தமிழ் சுற்பிப்பதை ஓரிரு ஆண்டுகள் தள்ளிப் போடலாம். எனினும், அவர்களும் வெகுவிரைவில் மற்றக் குழந்தைகளுடன் தமிழ் கற்கும் திறன் பெற்றுவிடுவார்கள் என்பதால், ஐந்தாவது வகுப்பிற்குள் அல்லது எட்டாவது வகுப்பிற்குள் மற்றக் குழந்தைகளுக்கு ஈடாகத் தமிழ் அறிவு பெறுமாறு கற்பிக்க முடியும்; கற்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment