பள்ளிக் கல்வியில் இன்று நமது மாநிலத்தில் ஐந்து தனித்தனிப் பாடத்திட்டங்கள் (மாநில உயர் கல்வி, மெடரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், நர்சரி ஆகியவை) உள்ளன. சமச்சீர்க் கல்வி முறை வந்த பின்னர் ஒரே திட்டம்தான் இருக்கும் என்பதால், இன்று உள்ள நான்கு தனித்தனிக் குழுமங்கள் தேவை இல்லை. அவற்றுக்கு பதிலாக ஒரு தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வி வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில பள்ளிக் (சமச்சீர்) கல்வி வாரியம் ஒரு தலைவர், செயலர், உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டும் அதன் கடமைகளும் பொறுப்புகளும் இணையாக இருக்க வேண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் அல்லது ஒரு கல்வியாளர் அதற்குத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் பொதுவாக பணியில் இல்லாத ஒருவரைத் தலைவராக நியமித்தால் வாரியம் தன்னாட்சியுடன் செயல்பட ஏதுவாக இருக்கும் என்பதால் அத்தகையவரையே நியமிப்பது சிறப்பாக அமையும் அந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநர் அவ்வாரியத்திற்கு உறுப்பினர் செயலராகச் செயல்படுவார் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் மற்ற அனைத்து இயக்குநர்களும், இயக்குநர்களுக்கு அடுத்த நிலையில் பணியாற்றும் குறைந்தபட்சம் இரண்டு அலுவலர்சுளும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் மேலும் மாநிலத்தில் அமைந்த பல்கலைக்கழகங்கள் பள்ளிகளின் ஆட்சிக் குழுவினர்,, பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக் கல்வியில் ஈடுபாடு உள்ள பொதுமக்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிலிருந்து ஒரு சிலரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவ்வாரியத்தின் அமைப்பு இன்றைய மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் ஆகியவற்றைச் சார்ந்தவர்களின் பண்பாடும், எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் தொடருவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவற்றைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கியவாறு உருவாக்கப்பட வேண்டும். ஆகவே, பலவித நிறுவனங்களைச் சார்ந்த ஒரு சில உறுப்பினர்களாவது தேர்ந்து எடுக்கப்பட்டவர்களாக இருப்பது உசிதம்.
No comments:
Post a Comment