குழந்தைகள் சிறிய வயதிலேயே வீட்டில் உள்ள பெரியவர்களைப் பார்த்து அந்த வேலைகளைச் செய்ய முயல்வார்கள் அல்லது அவர்களுக்கு உதவ முன் வருவார்கள், அதாவது பயனுள்ள செயல்களைச் செய்வது இயற்கையாக அமைந்த ஒன்று. மாண்டிசோரி கல்வி முறையில் பயனுள்ள பணிகள் வழியாக செயலதிறம் கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளின் வயதுக்கும் திறமைக்கும் ஏற்ப பயனுள்ள வேலைகள் செய்வது அவர்களின் பொது முன்னேற்றம் மட்டுமல்லாது அறிவியல் உண்மைகளை அறியவும், கற்பனை வளத்தைப் பெருக்கவும் பயன்படும் பள்ளியில் படிக்கும்போதே பணி அனுபவம் பெறுவதால் சமுதாயத்தை நேசிப்பதுடன் சமுதாயம் தன்னை நேசிப்பதையும் உணருவார்கள். இந்தச் சூழலில் பெற்றுக் கொண்ட எத்தகைய பணி அனுபவமும் பிற்கால வாழ்க்கையில் கண்டிப்பாகப் பயன்படும் இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டில் உடலுழைப்புப்பயிற்சி அளிப்பதில் இரண்டு காரியங்கள் நிறைவேறும்.
நமது குழந்தைகளின் கல்விச் செலவை அது ஈடு செய்து கொள்ளும் பிற்காலத்தில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஒரு தொழிலை கற்றுக் கொண்டதாகவும் இருக்கும் இத்தகைய ஓர் ஏற்பாடு நமது குழந்தைகளுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுப்பதாயிருக்கும். வேலை செய்வதை இழிவுபடுத்துவதைப் போல் தேசத்தைச் சீர் குலைக்கக் கூடியது வேறொன்றுமில்லை" என்று மகாத்மா காந்தி 1-9-1921 அன்று 'யங் இந்தியாவில் எழுதினார். இலக்கியப் பயிற்சியும் கைத்தொழில் பயிற்சியும் தனித்தனியாக அளிப்பதில் பயனில்லை என்று உணர்ந்து மகாத்மா தனது ஆசிரமப் பள்ளியில் கைத்தொழில் பயிற்சி மூலம் இலக்கியப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போதுதான் கைத்தொழில் பயிற்சி அலுப்பூட்டாது; இலக்கியப் பயிற்சி பயனுள்ளதாக அமையும் என்பது அவரது கருத்து இன்றோ பல பெற்றோர் பள்ளிக் குழந்தைகள் எந்தவித உடல் உழைப்பும் செய்யக் கூடாது என்று எண்ணுகின்றனர். இது தவறு பலவிதத் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுமாறு பணி அனுபவத்தைப் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக அமைக்க முடியும் அமைக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தில் இம்முறையில் கற்பித்தல் ஒரு பகுதியாக அமைக்கப்பட வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலமாக இத்தகைய பாடத்திட்டத்தின் பலன்களைப் பெற்றோருக்கு விளக்குவது பள்ளிகளின் கடமை.
No comments:
Post a Comment