அமைதிக்கான கல்வியும் விழுமங்களைக் கற்பித்தலும் - Kalvimurasustudymaterials

Latest

Educational materials, Study materials , Books , Note books , Model Questions.......

Oct 28, 2020

அமைதிக்கான கல்வியும் விழுமங்களைக் கற்பித்தலும்

                                                    நாடுகளுக்கு இடையிலும் ஒரே நாட்டில் இரு வேறு இனங்களுக்கு இடையிலும் மட்டுமல்லாது உற்றார் உறவினர் அல்ல குடும்பத்தாருக்கு இடையில் கூட அமைதியின்மை காணப்படலாம் பிரச்சினைகள் எழும் போது அவை நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்தால் அமைதி குறைந்து போவது இயற்கை. இன்றைய குழி பல பிரச்சினைகள் மாதக் கணக்கில் மட்டுமல்ல ஆண்டுக் கணக்கில் தீர்க்கப்படாது உள்ளன. இவை மனக்கவலையை உருவாக்குகின்றன. அதனால் அமைதியின்மை நிலவுகிறது. இச்சூழலில் இருந்து விடுபட இளைஞர்கள் வன்முறையை வெறுக்கும், அமைதியை நாடும் மக்களாக உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது.

                                              அமைதிக்கான கல்வி தவிப்பாடமாகவும் அமையலாம். எல்லாப் பாடங்களிலும் அமைதி பற்றிய கருத்துகள் விரவி வருமாறும் கற்பிக்கலாம் எவற்றை முதன்முறையிலும் எவற்றை இரண்டாவது முறையிலும் கற்பிப்பது என்பதைப் பள்ளிகளே தீர்மானிக்கலாம் என்று இக்குழு கருதுகிறது தனி மனித உரிமைகள் மதிக்கப்படாத சமுதாயத்தில் அமைதி நிலவாது. ஆகவே தனி மனித உரிமைகள் நிலை நாட்டப்படுவதும் அவற்றைப் பற்றிக் கற்பிப்பதும் தேவையாகிறது. உரிமைகளும் கடமைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்பதால் இவற்றை இணைத்தே கற்பிக்க வேண்டும். நேர்மையான வாழ்க்கை வாழும் சமுதாயத்தில்தான் அமைதி நிலவும். ஆகவே நேர்மையான வாழ்க்கையில் பற்றை உருவாக்க வேண்டும். கல்வி அமைதியை அதுபவிப்பவராக மட்டும் அல்லாது அமைதியை உருவாக்குபவராக மாணவர்களை மலரச் செய்ய வேண்டும்


                                               "காலத்திற்கேற்றவாறு புதுப்பித்து அமைத்தல் என்றால் அறம், ஆன்மிக விழுமங்கள் தன்னடக்கம் ஆகியவற்றை ஒப்புக் கொள்ளாது அவை இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவை என்று அவற்றை ஒதுக்கிவிடுவது அல்ல" என்று கோத்தாரிக் குழு (1966) தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. ஆகவே ஒழுக்கம் விழுமங்கள் ஆகியவை கற்பிக்கப்பட வேண்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. எனினும் விதிகள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டு, அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளைகளாகக் கற்பிப்பது பயனளிக்காது. 

பொதுவாக சமுதாயத்திற்கு எவை நல்லவை, அவை எவ்வாறு தனி மனிதருக்கும் நன்மை பயக்கும். என்பனவற்றை விளக்கி எது சரி, எது தவறு என்பனவற்றைத் தாங்களாகவே புரிந்து கொள்ளுமாறு பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய முறையே விழுமங்களையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க உதவும் சுருங்கச் சொல்வதென்றால், ஒழுக்கம், விழுமங்கள், அமைதிச் கல்வி இவை யாவும் கற்பிக்கப்பட வேண்டும். இவை தனிடப்பாடமாகவோ முக்கிய பாடங்களுக்கு வாடேயோ கற்பிக்கலாம் எவ்விழுமங்களை எவ்வாறு கற்பிப்பது என்பதைப் பள்ளிகளுக்கு விட்டு விடலாம்

No comments:

Post a Comment