கணிதம் என்பது எண்கள், அவற்றைப் பயன்படுத்துதல், அளவீடு ஆகியவற்றையும், அவற்றுடன் தொடர்புடையவற்றையும் கற்பது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், தர்க்க ரீதியான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் காரண காரியங்களை அறிந்து ஆராய்ந்து மெய்யான முடிவுகளைக் காணவும், தேவையான திறன்களை வளர்ப்பதற்கும், கணிதக்கல்வி பயன்படும். உயர்கல்வி கற்பதற்கும் வாழ்க்கைக்கும் தேவையான முக்கிய திறன்களில் இது கன்று என்பதால், இக்கல்வி எல்லா மாணவர்க்கும் கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது.
இன்றைய கால கட்டத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவர்களில் பலர் நிறுத்துவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று. கணிதம் படிப்பதில் உருவாகும் பயமும், அதன் விளைவாக நேரும் தோல்வியும் ஆகவே பாடத்திட்டமும் கற்பிக்கும் முறையும் மாணவர்களின் தேவைக்கும் திறமைக்கும் ஏற்றவாறு அமைக்கப்ப வேண்டியது இன்றையத் தேவை.
கணிதம் கற்க ஆர்வத்தை உருவாக்க கணித விளையாட்டுகள், புதிர்கள், கதைகள் மூலமாக அன்றாட வாழ்வுக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பையும் மற்றப் பாடங்களுக்குள்ள தொடர்பையும் விளக்குவது மிகுந்த பயன் அளிக்கும். கணிதத்தில் ஆர்வம் உருவான பின்னர் கணித விதிகள் தத்துவங்கள் நிரூபணங்கள் ஆகியவற்றைக் கற்பிக்கலாம். "ஒவ்வொரு நிலையிலும் கணிதம் கற்பிப்பதன் நோக்கம் பாடத்திட்டம் ஆகியவை அந்த அந்த நிலையில் மாணவரின் வயதுக்கும் திறமைக்கும் ஏற்ப அமைக்கப்பட வேண்டும்" என்று தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு (2005) வலியுறுத்துவதை இக்குழு செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறது
கணினி அறிவியல்
பெரும்பாலான நாடுகளில் பள்ளி நிலையிலேயே கணினி கல்வி கற்பிக்கப்படுகிறது. நமது இளைஞர்களும் அன்றாட வாழ்க்கையிலும் மேற்படிப்பதற்கும் தேவையான கணிப்பொறித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுமாறு கணினி கல்வி கற்பிக்க வேண்டியது இன்றைய சூழலில் கட்டாயம். ஆகவே கணிப்பொறி பயன்பாடு பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். மூன்றாம் வகுப்பு முதல் கணினிக் கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கற்றுத் தருதல் வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தானே கணிப்பொறியை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் உரிய பயிற்சிகளும் தரப்பட வேண்டும். கணிப்பொறியுடன் இணைந்த இன்டர்நெட் பயன்பாடும் தொடக்கப் பள்ளி நிலையிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment