குழந்தைகள், தாங்கள் கல்வி கற்பதை மதிக்கும் சூழலில்தான் கற்பதில் ஆர்வம் கொள்வார்கள். சமுதாயம் அவர்கள் கற்பதை மதிக்கிறது எனில் பள்ளிக்காக அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருக்காது. இதை உணர்ந்த நமது அரசு குறிப்பிட்ட தூரத்திற்குள் பள்ளிகள் அமைய வேண்டும் என்று நிர்ணயித்துச் செயல்படுத்தி வருகிறது வகுப்பு நேரத்திற்குள் கற்பிக்கும் அளவுக்கே பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். அத்தகைய திட்டம் செயல்படுத்தினால் கனமான புத்தகப் பை தேவைப்படாது. கல்வி கற்கத் தேவையான தரமான பாடநூல்கள், துணை நூல்கள், நூலகம் அடிப்படை வசதிகள் ஆகியவை இருக்க வேண்டும். கற்படுல் பின் தங்கிய மாணவர்க்குத் தண்டனை வழங்காது. அவர்களும் மற்ற மாணவர்க்கு இணையாக அறிவைப் பெற தனிக் கவனம் செலுத்த வேண்டும்; கற்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வகுப்பறைகள் காற்றோட்டமாகவும் மாணவர் யாவரும் வசதியாக அமர்ந்து பாடம் கேட்குமாறும் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் விளையாடத் தேவையான திடல்கள் வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் கழிப்பறை போன்ற மற்ற வசதிகள் யாவும் தேவையான அளவு வேண்டும். இவை யாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்
நாம் சுதந்திரம் பெற்ற பின்னர் அரசு மதிய உணவுத் திட்டம் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தல், புதிய முறைகளில் கற்பிப்பதற்கு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாடத்திட்டத்தில் மாணவர் ஆயுள் முழுமைக்கும் தேவையான செய்திகள் யாவற்றையும் திணிக்க முயலாது. குறைந்தபட்ச அளவுக்கே பாடத்திட்டத்தை அமைத்து, அதைக் கற்பிக்கும் போது மாணவர் தொடர்ந்து தனக்குத் தேவையானவற்றைத் தானே கற்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். கல்வி கற்க அவசியமான எல்லா வசதிகளும் உருவாக்கி அவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தேர்வு சம்பந்தப்பட்ட மன அழுத்தம் வாராது. நம் மாணவர்கள் காக்கப்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலையே இன்றையத் தேவை.
No comments:
Post a Comment