இன்றையச் சூழலில் மாணவர்களின் பெற்றோர் அல்லது சமுதாய மக்கள் சிலர் பாடத்திட்டத்தில் சிலவற்றை ஏன் சேர்த்தீர்கள்? என்றோ, ஏன் சேர்க்கவில்லை என்றோ கேட்கக் கூடும். அதற்குத் தகுந்த பதிலைப் பள்ளி நிர்வாகமும், பள்ளி ஆசிரியர்களும் சொல்ல வேண்டியது, அவர்தம் கடமை. மற்றவர்களை நம்பச் செய்ய வேண்டும் என்றால் தான் அதை முழுமையாக அறிந்து இருக்க வேண்டும். ஆகவே ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் பாடத்திட்டம் கலைத்திட்டம் பற்றி சிந்தித்து முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
உள்ளூர் மக்களுடன் ஒரு சமூகமான உறவை மேம்படுத்துவதற் காசுத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் தலைவர் ஆகியோரை, பள்ளிக்கு வரவழைத்து பள்ளியைப் பார்வையிடுவதுடன், மாணவர்களிடம் பேசவும் செய்தால், மாணவர்களுக்கும் உள்ளாட்சி பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும். இத்தகைய செயல்கள் மக்களாட்சியை வலுப்படுத்தும், மாணவர்களையும் நல்குடிமக்களாக உருவாக்கும்.
No comments:
Post a Comment