பொது அறிவும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் இக்காலக் கட்டத்தில் பள்ளிக் கல்வியில் எதைச் சேர்ப்பது எதை விடுவது என்று தீர்மானிப்பது மிகவும் கடினம் அதே சமயம் உள்ளூர் தொடர்பான செய்திகள் விவரங்களையும் அறிந்திருப்பதும் அவசியமாகிறது
பிற்கால வாழ்க்கைக்கு அல்லது மேற்படிப்புக்குத் தேவையான யாவற்றையும் ஒவ்வொரு மாணவரும் அறிந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. தவறான கருத்தில் தேவையில்லாத பாடம் பகுதிகளைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சிலவற்றைப் பற்றித் தெரிந்திருந்தால் போதுமானது. மேற்கொண்டு விவரங்களைப் பயிலுபவரே தேவையான போது கற்றுக்கொள்ள முடியும் என்பதால், அத்தகைய பாடங்களில் அறிமுகப்பகுதி மட்டுமே போதுமானது. அதற்கு மேல் விவரங்கடாப் பாடத்திட்டத்தில் திணிக்க வேண்டியதில்லை பாடத்திட்டம் மாணவனின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும் இதன் பொருள் மாணவர் விரும்புவதைப் படிக்கலாம் செய்யலாம் என்பதல்ல எதைக் கற்பிக்க வேண்டுமோ அதைக் கற்பிக்க வேண்டும் அதைக் கற்பிக்கும் முறை மாணவரின் வத்தைத் தூண்டுவதாகவும், பாடத்தைக் கற்கச் செய்வதாகவும் அமைய வேண்டும் பாடத்திட்டம் பொருள் பொறிந்ததாக இருக்க வேண்டும் அதாவது பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கத் தருந்ததாகவும் கருத்துள்ளவையாகவும் இருக்க வேண்டும்.
சுருங்கச் சொல்வதென்றால், பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் பாடங்கள் யாவும் வாழ்க்கைக்கு அல்லது மேற்படிப்புக்குத் தேவையானவையாகவும், மாணவரின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் பொருண்மைச் சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும்
நம் மாநிலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒட்டு மொத்தமாகவும் பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர், தங்களது அனுபவ வாயிலாகவும் கல்வி கேள்வி ஞானத்தலும் பெற்ற அறிவை, எழுத்து வடிவிலும் வாய்மொழி வழியாகவும் விட்டுச் சென்றுள்ளனர். இவை இன்று நாம் வகுத்துள்ள கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்ற அறிவியல் பகுப்பு முறையில் எழுதப்படவில்லை. சொல்லப்பட வில்லை என்றாலும், இவையாவும் மிகுந்த பயன் தருபவை என்பதில் ஐயமில்லை. இவை போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். இவை பள்ளிக் கல்வியில் இடம் பெற வேண்டும் இவற்றைக் கற்கும் இளைஞர்கள் நம் முன்னோரின் அறிவைப் போற்றுவதுடன் நம் மொழி நாடு குறித்து பெருமை கொள்வர் அது தன்னம்பிக்கையை வளர்க்கும் அவர்கள் வாழ்வு சிறக்க வழி வகுக்கும்
உலக அளவில் பொதுவான அறிவும், நமது நாட்டு அளவில் பொதுவான அறிவும் நமது மாநில, வாழும் பகுதி அளவில் அறிவும் பெறும் மாணவர் தமது அனுபவத்தால் அறிவை உருவாக்கவும் பெருக்கவும் திறமை பெறுவர். கல்வி பெறுவதன் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றான அறிவைப் பெருக்கும் செயல்களில் மாணவர் ஈடுபடும்போது கல்வியின் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை ஆதலால், தரமான பாடத்திட்டத்தில் உலக அளவில் பொது அறிவுடன், நமது நாடு மாநிலம் பகுதி விவரங்களையும் அறிவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment