நமது மாநிலத்தில் பள்ளிக்கல்வி என்பது ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வியைக் குறிக்கும் பொதுவாக ஆறு முதல் பதினெட்டு வயது வரையிலான குழந்தைகள் இந்த வகுப்புகளில் கல்வி கற்பார்கள். இந்தக் கல்வி நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை தொடக்கக்கல்வி என்றும் ஆறு முதல் எட்டு வகுப்பு வரையில் உயர் தொடக்க நிலை என்றும் ஒன்பதும் பத்தும் இடைநிலை என்றும் பதினொன்றும் பன்னிரண்டும் மேனிலை என்றும் குறிக்கப்படுகின்றன மேலும் மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு பள்ளி முன்பருவக் கல்வி நிலை மழலையர் வகுப்புகளும் சில பள்ளிகளில் உண்டு இந்த ஐந்து நிலைகளில் ஒவ்வொன்றுக்கும் தேவையான வசதிகள் பாடத்திட்ட முறை, ஆசிரியர் பயிற்சி, பயிற்றுவித்தல் முறை தூரத்திற்குள் இருக்க வேண்டும் என்று இலக்கு குறிக்கப்பட்டு அது தொடக்கப்பள்ளி தேர்வுமுறை இவற்றில் வேறுபாடுகள் உண்டு. மேலும், நமது மாநிலத்தில் பள்ளி, மாணவருடைய வீட்டில் இருந்து கீழ்க்காணும் செயற்படுத்தப்பட்டும் வருகிறது
1 கிலோ மீட்டர் நடுநிலைப்பள்ளி
3 கிலோ மீட்டர் உயர்நிலைப்பள்ளி
5 கிலோ மீட்டர் உயர்நிலைப் பள்ளி
8 கிலோ மீட்டர் மேனிலைப்பள்ளி
ஆசிரியர் பயிற்சி இரண்டு நிலைகளில் இன்று உள்ளன.
பன்னிரண்டாவது வகுப்பில் தேர்ந்தவர்களுக்கு ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பும், பட்டப்படிப்பில் தேர்ந்தவர்களுக்கு ஆசிரியர் கல்வி பட்டப்படிப்பும் இன்று நடைமுறையில் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் கல்வி கற்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பட்டயப் படிப்பு படித்து தேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிகளில் கல்வி கற்பிக்க ஆசிரியர் கல்வி பட்டப் படிப்புப் படித்துத் தேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள், இந்தப் பயிற்சிகள் அந்தந்த நிலை மாணவர்க்கு கற்பிக்கும் முறைகளைப் பயிற்றுவிக்கின்றன. மேலும் மழலையர்க்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் உண்டு ஒவ்வொரு நிலைக்கும் தேவையான வசதி களும் பாடத்திட்டத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. மாணவர்களின் வயதுக்கும் மனவளர்ச்சிக்கும் தக்கவாறு தேர்வு முறைகளிலும் பல மாறுபாடுகள் தேவை. பின்வரும் பகுதிகளில் ஒவ்வொரு நிலைக்கும் அவற்றுக்காக அமைக்கப்பட்ட உடகுழு அறிக்கைகளின் விவரங்கள் தரப்படுகின்றன. இவ்வறிக்கைகளைப் பரிந்துரைக்கப்படும் வாரியம் அமைத்து அதன் ஒப்புதலைப் பெற்றுச் செயற்படுத்துவது உசிதம்.
No comments:
Post a Comment