அறிவைப் பெற ஒரு மொழி தேவை. மனித இனம் ஒவ்வொன்றும் தமக்கென்று ஒரு மொழியை உருவாக்கித் தமது அனுபவங்களைத் தொகுத்து அளிப்பதன் மூலம் அடுத்து வரும் தலைமுறை அதைப் பயன்படுத்தி தன் அனுபவத்தையும் இணைத்து அறிவைப் பெருக்கி வருகிறது குழந்தைகளின் அடிப்படைத் திறமைகளே அறிவைப் பெறுவதற்கும் விழுமங்களையும் திறமைகளையும் வளர்த்துக்கொள்ளவும், ஊற்றுக் கண்களாக உள்ளன.
அவ்வடிப்படைத் திறமைகள் பின்வருமாறு:
மொழியை பயன்படுத்தும் அறிவு சமுதாயத்துடன் தொடர்பை உருவாக்கிப் பேணும் திறமை பணிகளைச் செய்யும் திறமையும் செய்யத் துணிதலும் சமுதாயம் வாழவும் தொடரவும் பலவிதமான செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள பலவகைப்படும் அறிவு தேவை. கைத்தொழில் செய்ய பயிற்சி தேவை கைகளைப் பயன்படுத்தித் தேவையான பணிகளை ஆற்ற பயிற்சி தேவை. வாழ்க்கைத் தொழில் கல்விக்கு பலவகையான வாய் வார்த்தையே போதுமானதாக இருக்கலாம். வழிவழியாகச் செய்யப்படும் பல கைத்தொழில்களுக்கும் வாழ்க்கைத் தொழில்களுக்கும் நூல்கள் என்று ஏதும் இல்லை என்றாலும் இவையாவும் ஒரு வகையில் அறிவு வளமே.
படிப்பறிவு கற்கும் பாடத்திற்கு ஏற்ப பல வகைப்படும். கணிதம் அறிவியல், சமூக அறிவியல், கலை, அரசியல், நீதிநூல், தத்துவ இயல் இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கோட்பாடுகள், கற்கும் முறை, துறை சார்ந்த சொற்கள், விளக்கங்கள் இன்ன பிற உண்டு இவற்றை அறிந்தால்தான் இவற்றின் வழி, துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் அறிவு பல வகைப்படும் அவற்றைப் பெருக்கிக் கொள்ள பலவகையான சொற்கள், விளக்கங்கா முறைகள் ஆகியவற்றைக் கற்க வேண்டும்: பயிற்சிகள் பெற வேண்டும். இக்கல்வியைப் பெற பல வகையான முறைகள் உண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு துறை அறிவைப் பெற வெவ்வேறு முறைகள் ஏற்புடையதாக இருக்கக் கூடும் ஆகவே ஒரு மாணவனுக்கு ஒரு தனிப்பட்ட துறை அறிவை வளர்க்க அம்மாணவனுக்கும் துறைக்கும் ஏற்புடைய கற்பிக்கும் முறையைப் பயன்படுத்தினால் கல்வி சிறக்கும் ஆகவே கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்க்கும் சூழலுக்கும். கற்பிக்கும் பாடத்திற்கும் ஏற்ற முறையில் கற்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment