குழந்தை பிறந்து கண் விழித்துப் பார்க்கவும் ஒலிகளைக் காதால் கேடகவும் தொடங்கியதுமே பார்ப்பதையும் கேட்பதையும் புரிந்து கொள்ள முயலுகிறது அதேபோன்று தன் அன்னையின் அரவணைப்பிலும் மற்றவர்களையும் பொருள்களையும் தொட்டும் தொடு உணர் அறிவையும் பெருக்கிக் கொள்கிறது. பலவகையான வாசனைகளையும் உண்ணும் உணவு மூலமாகவும் வாயால் கடித்தும் பலவிதமான சுவைகளையும் புரிந்து கொள்ள முயல்கிறது. எந்த உணவில் எனன வாசனை வருகிறது? என்ன வகையான சுவையுடன் உள்ளது? என்ன சொன்னால் கேட்பார்கள்? என்ன செய்கிறார்கள் என்பனவற்றையெல்லாம் நோக்கி தனது பகுத்தறிவையும் பெருக்கிக் கொள்கிறது . மழலையர் நிலையிலான (அதாவது ஆறு வயதுக்கு முன் அல்லது எட்டு வயதுக்கு முன்) கல்வி வளர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியமானவை.
இது மூளை வளர்ச்சிக்கான பருவம் என்பதால் ஆயுள் முழுவதுமான முன்னேற்றத்திற்கு அடித்தளம் இந்த பருவத்தில் தான் இடப்படுகிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது கற்றலுக்கான ஆவலை வளர்த்து வேரூன்றச் செய்யும் இந்தப் பருவத்தில் உரிய கவனம் செலுத்துவது மிக முக்கியம் உரிய கவனம் செலுத்தவில்லை எனில் குழந்தையின் வளர்ச்சி தவறான பாதையில் செல்ல தேரிடுவதுடன், பின்னர் திருத்தும் வாய்ப்பும் இல்லாது போக நேரிடலாம்.
ஆகவேதான் இந்த பருவத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான கவனம் செலுத்தப்பட வேண்டும் வாய்ப்புகள், அனுபவங்கள் தரப்பட வேண்டும். உடல் அளவிலும் உள அளவிலும் சமுதாயச் சூழலிலும் பன்முக வளர்ச்சி பெற வழிகாட்டுதல் தேவை இந்தப் பருவத்தில் குழந்தைகளின் விருப்புகளுக்கு ஏற்றாற்போல் பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும், நம்பிக்கையுடனும் அச்சமின்றியும் எதையும் ஆராய்ந்து அது குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்க்கும் சூழல் மழலையர் பள்ளியில் ஒரு வேண்டும் பேச, கேட்க உரையாட வாய்ப்புகள் வேண்டும். ஆகவே பள்? மொழி வீட்டு மொழியாக இருக்க வேண்டும் என்பர் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இந்த நிலையில் பாடல் தேவையில்லை. படிப்பது, எழுதுவது ஆகியவை இந்த நிலையில் தவிர்க்கப்பட வேண்டும்
No comments:
Post a Comment