தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனைை பெற்று தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும்
பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்
அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடப்பாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். வருகின்ற மே மாதம் தொடக்கத்தில் அல்லது இறுதியிலோ கண்டிப்பாக தமிழகத்தில் 10 ,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.