பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறையா? - Education murasu

Latest

Monday, January 24, 2022

பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறையா?

 தமிழகத்தில் தற்போது பள்ளி கல்லூரிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிப்ரவரி 1 முதல் மேலும் 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.




கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில் பிப்ரவரி பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது


இருப்பினும் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.