தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு - Education murasu

Latest

Tuesday, October 12, 2021

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

 தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.



அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அரசு வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத காரணத்தால் பலரும் அதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களை கோரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி நிலவரப்படி நிரப்ப தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அக்டோபர் 12ஆம் தேதி அன்று மாலை நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் ஒப்படைக்க வேண்டும்.


தற்போது பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் விரைவில் போட்டித்தேர்வு வாயிலாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை தேர்வுக்கு தயாராகும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.