காலாண்டு , அரையாண்டு தேர்வுகள் கிடையாது. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - Education murasu

Latest

Tuesday, October 12, 2021

காலாண்டு , அரையாண்டு தேர்வுகள் கிடையாது. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.


வரும் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகிவிட்டது.




இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் வகுப்பறையில் அமரலாம். குழந்தைகளால் நீண்ட நேரம் மாஸ்க் அணிய முடியவில்லை என்றால் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாம். நேரடி வகுப்புகளுக்கு வருவது கட்டாயம் அல்ல. மாணவர்களின் நலனுக்காகவே பள்ளிகள் திறக்கப் படுகின்றன என்று தெரிவித்திருந்தார். அதன் படி, முழுவதுமாக பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும் பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் பயிற்சி பெரும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திட்டமிட்டப்படி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பெற்றோர் பள்ளிக்கு வெளியே காத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.


 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.