Jio 9வது ஆண்டு விழா சலுகை: இரண்டு மாதங்கள் இலவச JioHome சேவை
ஜியோ நிறுவனம் தனது 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் முக்கிய அம்சமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு இரண்டு மாதங்கள் முழுமையாக இலவச JioHome சேவை வழங்கப்படுகிறது.
யாருக்கு இந்த சலுகை கிடைக்கும்?
இந்த சலுகை ஜியோ போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மட்டும் கிடைக்கும். மேலும், ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட மாதாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களே இந்த நன்மையை பெற முடியும்.
ஜியோவின் அறிவிப்பின்படி, ரூ.349 திட்டத்தை தொடர்ந்து 12 மாதங்கள் சரியான நேரத்தில் ரீசார்ஜ் செய்தால், 13வது மாத ரீசார்ஜ் இலவசமாக வழங்கப்படும்.
JioHome இலவச டிரையல் விவரங்கள்
செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். ரூ.1,200 மதிப்புள்ள இரண்டு மாத JioHome கனெக்ஷன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில்,
1,000க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள்
30 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா
12க்கும் மேற்பட்ட OTT ஆப்கள் சந்தா
Wi-Fi 6 ர uter
4K Set-Top Box
இவை அனைத்தும் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகின்றன.
இலவச JioHome டிரையல் எப்படி பெறுவது?
ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடவும்.
முகப்புப் பக்கத்தில் “Jio Home Free Trial” என்ற பேனர் இருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.
அல்லது Get Jio Home விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.
அதன் பிறகு உங்கள் பின் குறியீடு மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
தொடர்பு விவரங்களை உள்ளீடு செய்தவுடன், இலவச JioHome டிரையல் பதிவு செய்யப்படும்.
JioHome குறைந்த விலை திட்டங்கள்
இலவச டிரையல் காலம் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஜியோ ஹோம் திட்டங்களைத் தொடரலாம்.
₹599 திட்டம் – 30 Mbps அன்லிமிடெட் டேட்டா, Jio Cinema, Hotstar, Sony LIV, Zee5 போன்ற OTT சந்தாக்களுடன்.
₹899 திட்டம் – அதிக சேனல்கள் மற்றும் கூடுதல் நன்மைகளுடன்.
₹1199 திட்டம் – பிரீமியம் வேகம் மற்றும் பல OTT ஆப்கள் உடன்.
இந்த அனைத்து திட்டங்களும் அதிக நன்மைகள் கொண்டதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானதைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.