தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட நர்சுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2020ம் ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கி காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் 2300 பேர் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த 30 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கரோனா தொற்று காலத்தில் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவ கல்வி இயக்குநரகம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 800 பேர் பணி நீட்டிப்பு செய்யாமல் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்காமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.